என் மலர்
செய்திகள்

வேப்பம்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை
வேப்பம்பட்டு அருகே ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
செவ்வாப்பேட்டை:
வேப்பம்பட்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அமுலன். இவரது மனைவி குஷ்பு (24). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று குஷ்பு வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்றார். அப்போது வெளி மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விரைந்து சென்று குஷ்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குஷ்பு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story