search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவ்வாதுமலையில் வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு
    X

    ஜவ்வாதுமலையில் வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு

    ஜவ்வாதுமலையில் வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பலை பிடிக்க எஸ்.பி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை கோவிலம் குண்டூர் அடுத்த பேராத்தூர் கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் விஜி (வயது 22). இவர், விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றார். சேகரித்த விறகுகளை கயிற்றில் கட்டி தலையில் வைத்து சுமந்துக் கொண்டு வீடு திரும்பினார்.

    அப்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் யாரோ? நாட்டுத் துப்பாக்கியால் விஜியை நோக்கி சுட்டனர். விஜி மீது 9 குண்டுகள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்து சுருண்டு விழுந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    உடன் இருந்தவர்கள், விஜியை மீட்டு சிகிச்சைக்காக உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விஜி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜமுனா மரத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடும் போது குறியில் இருந்து அவற்றை தப்பவிடாமல் இருப்பதற்காக நாட்டுத் துப்பாக்கியில் கொத்து, கொத்தாக பாயும் ரவை குண்டுகள் எனப்படும் பால்ஸ் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வகை, ரவை குண்டுகளை பயன்படுத்தி வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனவே, விஜி மீது முன்விரோதம் காரணமாக எதிரிகள் யாராவது துப்பாக்கிச் சூடு நடத்தினரா? அல்லது வேட்டை கும்பல் விலங்குகளை வேட்டையாடும் போது துப்பாக்கி குண்டுகள் தவறி பாய்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படு த்தியுள்ளனர். இந்த நிலையில் வேட்டை கும்பலை பிடிக்கவும், நாட்டுத் துப்பாக்கிகளை கைப்பற்றவும் எஸ்.பி. பொன்னி தலைமையில் ஏ.டி.எஸ்.பி. ரங்கராஜன், போளூர் டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் 6 இன்ஸ் பெக்டர்கள், 5 சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் 20 போலீசார் கொண்ட குழு ஜவ்வாதுமலை கிராமங்களில் இன்று காலையில் இருந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு ள்ளனர்.

    ஜவ்வாதுமலை பகுதியில் வேட்டை கும்பலை பிடிக்க போலீசார் தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்கின்றனர். இது தொடர்பாக பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஜமுனாமரத்தூர் அடுத்த கள்ளந்தல் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 கள்ள துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×