என் மலர்
செய்திகள்

சென்னையில் வங்கியில் பணம் செலுத்த சென்ற மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் கொள்ளை
சென்னையில் வங்கியில் பணம் செலுத்த சென்ற மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
சென்னை பாரிமுனையை அடுத்த மண்ணடி அய்யர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (65). இவர் நேற்று மதியம் ‘32 பி’ நகர பேருந்து மூலம் தங்கசாலையில் இருந்து பிராட்வேக்கு வந்தார். கையில் துணிப்பை வைத்திருந்தார். அதில் வங்கியில் செலுத்துவதற்காக செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ.1000 நோட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.2 லட்சம்.
பிராட்வே வந்ததும் அவர் பஸ்சில் இருந்து இறங்கினார். அதன்பிறகு பையை பார்த்தார். உள்ளே பணம் இல்லை. பை’பிளேடு’ மூலம் வெட்டப்பட்டிருந்தது.
பஸ்சில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருந்தது. அதை பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் பிளேடு மூலம் பையை வெட்டி கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story