search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய நோட்டுகளுக்கு தடையால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை:தமிழக அரசு குற்றச்சாட்டு
    X

    பழைய நோட்டுகளுக்கு தடையால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை:தமிழக அரசு குற்றச்சாட்டு

    ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடையால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில், கடந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மதிப்பிழக்கச் செய்ததன் விளைவாக கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டதால் தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் இதர கடன்களை வசூலிப் பதில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 5½ ஆண்டுகளில், உரிய காலத்தில் பயிர்க்கடன் தொகையை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு அரசின் சலுகையாக ரூ.910 கோடி வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்களது வேளாண்மைத் தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 7.11.2016 வரை 54,33,248 விவசாயிகளுக்கு ரூ.25,289.65 கோடி அளவிற்கு வட்டியில்லாப் பயிர்க்கடன்கள் வழங்கபட்டுள்ளன.

    இந்த ஆண்டு ரூ.6000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு 7.11.2016 வரை 3,38,612 விவசாயிகளுக்கு ரூ.2,075.41 கோடி மட்டுமே பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 201516 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 6,38,643 விவசாயிகளுக்கு ரூ.3512.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிக்கையால் பயிர்க்கடன் வழங்குவதில் ஆண்டுக் குறியீட்டினை முழுமையாக எய்த இயலாத நிலை எழுந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×