என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி மாரடைப்பால் பலி
    X

    விவசாயி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி மாரடைப்பால் பலி

    விவசாயி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    தலைஞாயிறு:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பிரிஞ்சிமூலையை சேர்ந்தவர் முருகையன். இவர் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்து நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி பால சுப்பிரமணியன் (65) கலந்து கொண்டார்.

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற போது பால சுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

    கீழ்வேளூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பயிர் கருகியதை கண்டு அதிர்ச்சியடைந்து 3 விவசாயிகள் இறந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×