search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு தரும் பணத்தை வைத்துக்கொண்டு உங்களால் 5 ஆண்டுகள் வாழ முடியுமா? வாக்காளர்களிடம் ராமதாஸ் கேள்வி
    X

    ஓட்டுக்கு தரும் பணத்தை வைத்துக்கொண்டு உங்களால் 5 ஆண்டுகள் வாழ முடியுமா? வாக்காளர்களிடம் ராமதாஸ் கேள்வி

    அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டுக்கு தரும் பணத்தை வைத்துக்கொண்டு உங்களால் 5 ஆண்டுகள் வாழ முடியுமா என வாக்காளர்களிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேலாயுதம் பாளையம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்கள் படிக்க வேண்டும். அவர்களின் நிலை உயர வேண்டும் என்பதற்காக பாடுபடும் ஒரே இயக்கம் பா.ம.க. மட்டும் தான். ஆனால் பெண்கள் காலத்திற்கும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தெருவுக்கு, தெரு மதுபான கடையை திறந்து வைத்து அனைவரையும் குடி காரர்களாக்கி வருகிறது.

    ஒரு தலைக்காதல் காரணமாக இளம் பெண்களின் படிப்பு தடைபடுவதோடு அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    நாம் காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அது பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் நடைபெற வேண்டும். சட்டசபையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களின் பிரச்சினைகளை பேசாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கொண்டுள்ளனர். சட்டசபையில் வேண்டுமானால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கலாம்.

    ஆனால் வெளியில் பா.ம.க. மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. நான் (ராமதாஸ்) அறிக்கை வெளியிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை காப்பியடித்து மற்றவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். எந்த பண பட்டுவாடாவுக்காக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ? அதே பணப்பட்டு வாடா இந்த தேர்தலிலும் நடைபெற்று வருகிறது.

    கடந்த தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக அவர்கள் போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் தலா 20 கோடி ரூபாயை இரண்டு கட்சிகளும் செலவு செய்தன. குறிப்பாக அன்புமணியை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்தார்கள்.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டுக்கு தரும் பணத்தை பெற்று உங்களால் 5 வருடம் வாழ முடியுமா? என்பதை சிந்தித்து பாருங்கள். எனவே பணத்திற்கு மயங்காமல் பா.ம.க. வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×