என் மலர்

  செய்திகள்

  முத்துப்பேட்டையில் பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்: 5 பேர் கைது
  X

  முத்துப்பேட்டையில் பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்: 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்துப்பேட்டை அருகே மோதலில் ஈடுப்பட்ட 5 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் சூர்யா தனது சைக்கிளை அங்குள்ள ஸ்டாண்டில் நிறுத்தியுள்ளார். அதன் கேரியரை சில மாணவர்கள் கழட்டியுள்ளனர்.

  இதுபற்றி சூர்யா பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியிடம் கூறினார். இதைதொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் இதுபோல் நடந்து கொள்ளமாட்டோம் என எழுதி கேட்டுள்ளார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த அதேபள்ளியில் படிக்கும் 6 மாணவர்கள் சூர்யாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிகேட்ட பிளஸ்-2 மாணவர்களான கமலேஸ்வரன். சுதர்சன் ஆகியோரை 6 மாணவர்களும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த 2 பேரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதுதொடர்பாக முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்களை தாக்கிய 5 மாணவர்களை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.

  Next Story
  ×