என் மலர்
செய்திகள்

பழனி பகுதியில் பலத்த மழை
பழனி:
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலதாமதமாக தொடங்கியது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கவில்லை.
கோடைகாலம் போல் வெயில் அடித்து வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று திண்டுக்கல், பழனி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திண்டுக்கல்லில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. பழனியில் சற்று பலத்த மழை பெய்தது.
இதனால் ரெயில்வே பீடர் ரோடு, பஸ் நிலையம் ரவுண்டானா, காந்திரோடு ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பல நாட்களுக்கு பின்னர் பெய்த மழையால்அப்பகுதி விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தால்தான் சாகுபடியை தொடங்க முடியும் என்பதால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பலத்த மழை பெய்ததின் காரணமாக குளங்களும், அணைகளும் நிரம்பின. ஆனால் இந்த முறை ஐப்பசி மாதம் முடிகிற நிலையிலும் குளங்கள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்க வில்லை.
ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதியில் லேசான சாரல் மழையே பெய்தது. வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி பயிர்கள் நன்கு வளரும் வாய்ப்பு உள்ளது.






