என் மலர்
செய்திகள்

தர்மபுரியில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி
தர்மபுரி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 10, 13, 15, 17
மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் மூத்தோர் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள்
நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை நிர்வாகி மணிகண்டன் தொடங்கி வைத்தார். பயிற்றுனர் சீனிவாசன் வரவேற்றார். இந்த
போட்டிகளில் 750-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கணேசன்,
வெங்கடேஷ், ஞானப்பழம், சக்தி, வெங்கடகிருஷ்ணன், செழியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
Next Story