என் மலர்
செய்திகள்

சாத்தான்குளம் அருகே காண்டிராக்டர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது52). இவர் சென்னையில் தங்கியிருந்து பில்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கோவில் திருவிழாவையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பு கிராமத்திற்கு வந்திருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பிரின்ஸ் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சித்திரை அவரது சகோதரர்கள் ஜெயபிரகாஷ், தன்ராஜ், மற்றும் சேவியர் உள்பட 5 பேர் பிரின்ஸ்சின் கார் டிரைவரான அப்பகுதியை சேர்ந்த டொமினிக் (40) என்பரிடம் தகராறு செய்தனர். இதைபார்த்த பிரின்ஸ் 5 பேரிடமும் எனது வீட்டின் முன்பு தகராறு செய்ய கூடாது. வெளியே போங்கள் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சித்திரை உள்பட 5 பேரும் சேர்ந்து பிரின்சை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி விட்டனர். இதில் காயமடைந்த பிரின்ஸ் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து சித்திரை உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.