என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையம் அருகே கடைக்கு சென்ற பெண் மாயம்
  X

  ராஜபாளையம் அருகே கடைக்கு சென்ற பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெராக்ஸ் கடைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சித்திரைசெல்வி (வயது21). இவர்களுக்கு 2½ வயதில் மகன் உள்ளான்.

  நேற்று காலையில் வேல்முருகன் ஒரு வேலை விசயமாக நெல்லைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சித்திரை செல்வி தன் குழந்தையை தாய் பாப்பம்மாளிடம் விட்டு விட்டு ஜெராக்ஸ் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை.

  ஊர் திரும்பிய வேல்முருகன் பல இடங்களில் தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதுகுறித்து சேத்தூர் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சித்திரை செல்வியை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×