என் மலர்
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே பா.ஜனதா பிரமுகர் உண்ணாவிரதம்
திருத்துறைப்பூண்டி அருகே உளுந்து, துவரம் பருப்பு, கோதுமை, ஆயில், மண்ணெண்ணெய் போன்றவை சரியாக வழங்காததை கண்டித்து பா.ஜனதா பிரமுகர் உண்ணாவிரதம் இருந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியில் வசிப்பவர் பாரதிய ஜனதா சிறுபான்மையினர் மாநில துணைத்தலைவர் ஹபீப் முகமது(வயது56). இவருக்கு மரியம்பீவி என்ற மனைவியும், முகமதுஅசாருதீன், ஆசிக், ஆரீப், ஆயுசா என்ற குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் உளுந்து, துவரம் பருப்பு, கோதுமை, ஆயில், மண்ணெண்ணெய் போன்றவை சரியாக வழங்காத காரணத்தால் அவர் குடும்பத்தோடு கட்டிமேடு அங்காடி வாசலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர் ஜோதிபாசு, கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் அனைத்து பொருள்களும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததின் பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
Next Story