என் மலர்

  செய்திகள்

  கோவை புறநகரில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 9 பவுன் செயின் பறிப்பு
  X

  கோவை புறநகரில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 9 பவுன் செயின் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை புறநகரில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 9 பவுன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  கோவை:

  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டாம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி பூபதி. பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

  சம்பவத்தன்று அவரது கடைக்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் ஒரு வாலிபர் பூபதியிடம் வந்து சிகரெட் கேட்டுள்ளார். பூபதி எடுத்து கொடுக்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை வாலிபர் பறித்தார். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கு இருந்து தப்பிச்சென்றனர்.

  இதில் அதிர்ச்சியடைந்த பூபதி இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற வாலிபர்கைளை தேடி வருகிறார்கள்.

  சூலூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் ஜான் விக்டர். இவரது மனைவி ரோஸ்மேரி (26). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் கண்இமைக்கும் நேரத்தில் ரோஸ்மேரியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து அங்கு இருந்து தப்பிச்சென்றனர்.

  இது குறித்து ரோஸ்மேரி சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×