என் மலர்

  செய்திகள்

  2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
  X

  2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு அறிவித்து வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் ‘மங்கள்யான்’ செயற்கை கோள் படம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

  ஈரோடு:

  ‘மங்கள்யான்’ செயற்கைகோள் திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பள்ளி விழாவில் கலந்து கொள்ள இன்று ஈரோடு வந்தார்.

  அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  மத்திய அரசு அறிவித்து வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் ‘மங்கள்யான்’ செயற்கை கோள் படம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  விஞ்ஞான ஆய்வு கழகத்தின் சாதனையை இந்திய அரசும் இந்திய மக்களும் அங்கீகரித்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இது மேலும் சாதனை படைக்க எங்களுக்கு உத் வேகமாக உள்ளது.

  சந்திராயன் திட்டம் 3 கட்டமாக நடக்கிறது. 2018-ம் ஆண்டில் திட்டம் தொடங்கி நடக்கும். மங்கள்யான் செயற்கை கோளின் ஆயுட் காலத்தை நீட்டிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

  நிலவில் மனிதனை அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

  இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

  Next Story
  ×