என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் முறையாக பொருட்களை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் முறையாக பொருட்களை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலிமுகம்மது பேட்டை, பல்லவர்மேடு, ஓரிக்கை ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வினியோக திட்ட மானியத்தை சுருக்க கூடாது, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் உளுந்து, துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும். பகுதி நேர ரேஷன் கடைகளை முழுநேர கடைகளாக மாற்ற வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்க சொல்லி மக்களை கட்டாயபடுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story