என் மலர்
செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பஸ்சில் 38 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் 38 மது பாட்டில்களுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பாமணி பேருந்து நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், வீரப்பரஞ்ஜோதி உள்ளிட்டோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகையிலிருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்தை சோதனை செய்தபோது அதில் சேதுபாவாசத்திரம் புதுமனைத் தெருவை சேர்ந்த ஆறுமுகம்(30), சேதுபாவாசத்திரம் கடைத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வெற்றிச்செல்வன் (22) ஆகிய இருவரும் பையில் 375 மில்லி அளவு கொண்ட 38 பாண்டிச்சேரி மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 38 பாட்டில்களையும் கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Next Story