என் மலர்

    செய்திகள்

    பாபநாசம் அருகே விவசாயி மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
    X

    பாபநாசம் அருகே விவசாயி மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாபநாசம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உத்தமதானபுரம் பகுதி கீழத்தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது45). விவசாயி.அதே தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திக்(22), சம்பத்குமார்(27), சரத்குமார், அருண்குமார். இவர்கள் 4 பேரும் நேற்று குடிபோதையில் செங்குட்டுவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விவசாயி செங்குட்டுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் விசாரணை நடத்தி கார்த்திக், சம்பத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றார்.

    Next Story
    ×