என் மலர்

  செய்திகள்

  ஏ.டி.எம்.கள் இயங்காததால் விமான நிலையத்தில் பயணிகள் அவதி
  X

  ஏ.டி.எம்.கள் இயங்காததால் விமான நிலையத்தில் பயணிகள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பவில்லை. ஏ.டி.எம். கள் இயங்காததால் விமான நிலையத்தில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

  ஆலந்தூர்:

  சென்னை விமான நிலையத்தில் 3 ஏ.டி.எம்.கள் உள்ளன. தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அங்குள்ள ஏ.டி.எம்களில் பணம் நிரப்பவில்லை. எனவே இன்று அங்குள்ள அனைத்து ஏ.டி.எம்.களும் செயல்படவில்லை எனவே, அங்குள்ள தபால் நிலையத்தில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிவரை மட்டுமே இயங்கியது. பணம் இல்லாததால் அதன் பின்னர் மூடிவிட்டு சென்று விட்டனர்.

  மேலும், விமான நிலையதில் வெளிநாட்டு பணத்தை ரூபாயாக மாற்றும் ‘மணி எக்சேஞ்ச்’ அலுவலகமும் செயல்படாமல் மூடப்பட்டது. இதனால் விமான பயணிகளும், மூத்த குடிமக்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

  Next Story
  ×