என் மலர்

  செய்திகள்

  திருப்பத்தூரில் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி
  X

  திருப்பத்தூரில் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூரில் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர்- தர்மபுரி மெயின் ரோட்டில் பெரியகண்ணாலப்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் மோதியது.

  இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×