search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டு குவிகிறது
    X

    டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டு குவிகிறது

    டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலை முதல் ஏராளமான குடிமகன்கள் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை அளித்ததால் மீதி சில்லரை கொடுக்க முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திண்டாடினர்.

    காஞ்சீபுரம்:

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்த நிலையில் காஞ்சீபுரத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வீட்டின் வாடகையை முதல் வாரத்தில் செலுத்த வேண்டிய நிலையில் வீட்டின் சொந்தகாரர்களிடம் வாடகை அளிக்கும் போது 500 மற்றும் 1000 மாக பெற மறுப்பதால் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

    இது குறித்து வாடகைக்கு குடியிருப்போர் தெரிவிக்கையில் நாங்கள் வீட்டில் கணவன் மனைவி தையல் வேலை செய்து சம்பாதிக்கிறோம். அன்றாடம் மூல பொருட்கள் வாங்கவும், வீட்டு செலவிற்காகவும் பணம் கையிருப்பில் வைத்திருப்பது மிகவும் அவசியம் இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பதால் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறோம்.

    வீட்டு செலவிற்கும், குழந்தைகளின் பள்ளி மற்றும் டியூசன் கட்டணங்களுக்கும் சில்லரை நோட்டுக்கள் இல்லாத நிலையில் வீட்டின் வாடகையை கொடுக்க சென்றால் அவர்களும் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர்.

    வங்கிக்கு சென்று பணத்தை மாற்றலாம் என்றால் எங்களின் ஒருநாள் தொழில் பாதிக்கும். எனவே கடந்த 3 நாட்களாக நாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளோம் என சோகத்துடன் கூறினர்.

    டாஸ்மாக் கடைகளில் கடந்த இரு நாட்களாக வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் ஏராளமான குடிமகன்கள் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை அளித்ததால் மீதி சில்லரை கொடுக்க முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திண்டாடினர்.

    இது குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில் பாங்கிகளில் பழைய நோட்டை மாற்றுகையில் 2 ஆயிரம் நோட்டுகளை மட்டுமே கொடுக்கின்றனர். அதனை பெரும்பாலும் வெளியில் மாற்ற முடியாத நிலையில் குடிமகன்கள் மூலம் டாஸ்மாக் கடைக்கு கொடுத்து அனுப்புகின்றனர்.

    100 ரூபாய் சரக்கிற்கு 2000 ரூபாய் தரும் நிலையில் நாங்கள் அனைவருக்கும் மீதி சில்லரை தரமுடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகின்றது என தெரிவித்தார்.

    கட்டிட தொழிலாளர்களுக்கு தினமும் மாலை வேலைகளில் கூலி வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் குறைந்த பட்சம் 10 பேர் வேலை செய்தாலும் ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேல் கூலி அளிக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் சில்லரை நோட்டுகளையே கேட்பதால் தற்போது காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய கட்டிட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×