என் மலர்
செய்திகள்

திருச்சி நகைக்கடைகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை
திருச்சி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சி:
திருச்சி பெரியகடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, மற்றும் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கடைகளில் இருந்த மொத்த நகைகளின் இருப்பு விபரம், விற்பனை நகை விபரம், பணம் கணக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
தற்போது மத்திய அரசின் புதிய பண மாற்ற நடவடிக்கையால் நகைக் கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் சில கடைகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு நகை விற்பனை நடந்ததாக கூறப்பட்டது.
இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வருமானத்திற்குரிய கணக்குகளை கடை நிர்வாகம் வைத்துள்ளதா? என்றும் சோதனை நடந்தது.
சில கடைகளில் ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.
Next Story