என் மலர்
செய்திகள்

நாமக்கல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
நாமக்கல் அருகே திருவள்ளுர் காலனியில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலான குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நிலத்தடி நீரும் கிடைக்காதததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளுவர் காலனியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிக்கு சென்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன தகவல் அறிந்த நாமகக்ல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
Next Story