என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களால் உருவாக்கப்படுகிறது: கலெக்டர் பழனிசாமி பேச்சு
    X

    மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களால் உருவாக்கப்படுகிறது: கலெக்டர் பழனிசாமி பேச்சு

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் பணி மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு ஒரு நாள் பயிற்சி வகுப்பு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் பணி மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு ஒரு நாள் பயிற்சி வகுப்பு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    அவர் பேசும் போது கூறியதாவது:-

    பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர்களை நாம் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். ஆசிரியர்கள் புதிய செய்திகளை நன்கறிந்து, அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் சிந்தனைத் திறனை மேம்படுத்த முடியும். கடுகளவு நாம் சொல்லித் தருகிற வி‌ஷயங்கள் மாணவர்களிடையே மலையளவு மாற்றத்தை உருவாக்கும்.

    வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கும், போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் மாணவர்களைத் தயார் செய்து, அவர்களை நல்லதொரு முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. இளையத் தலைமுறையினரின் எதிர்காலம் ஆசிரியர்களால் உருவாக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயிற்சி வகுப்பில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், தேவராஜ், நிர்வாக அலுவலர் ராமராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×