என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் பலி
    X

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் பலி

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதி, சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (22) என்பவர் வேலைபார்த்து வந்தார். இவர் தஞ்சாவூரில் ஒரு இளம்பெண்ணை கடத்திய வழக்கில் கைதாகி முன்ஜாமீனில் வெளிவந்தவர். அதுமுதல் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு வி‌ஷம் குடித்துவிட்டார். காலையில் தொழிற்சாலை உரிமையாளர் வந்து பார்க்கும் போது ராஜீவ்காந்தி இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது சகோதரர் ராகுல்காந்தி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×