என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே ஊருக்குள் புகுந்த முதலை
சீர்காழி அருகே ஊருக்குள் புகுந்த முதலையை தீயணைப்பு துறையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து இரை தேடி கரைக்கு வந்த முதலை அளக்குடி அய்யம்பேட்டை தெருவுக்குள் புகுந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சீர்காழி தாசில்தார் மலர்விழிக்கு தகவல் கொடுத்தனர். அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தார்.
நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது முதலை அங்குள்ள கருவேல் மர காட்டிற்குள் சென்று விட்டது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 1½ மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். அது 5½ அடி நீளம் இருந்தது. பின்னர் முதலை சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊருக்குள் முதலை புகுந்ததால் பொதுமக்கள் பீதியுடன் உள்ளனர்.
Next Story






