என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் (30). இவர் தனது மோட்டார் சைக்கிளை செம்போடை கடைவீதியில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம்.
இது குறித்து விசாரித்த போது இரண்டு பேர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற விவரம் அறிந்து அவர்கள் சென்ற பாதையில் பொதுமக்களுடன் தேடி சென்றார். அப்போது ஆயக்காரன்புலம் பெரியக்குத்தகை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சரவணன் (31), தனபால் மகன் சாமிநாதன் (32) ஆகிய இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






