என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி பகுதியில் பெரும்பாலான நகை கடைகள் அடைப்பு: கடைமுன் அறிவிப்பு பலகை
    X

    கோபி பகுதியில் பெரும்பாலான நகை கடைகள் அடைப்பு: கடைமுன் அறிவிப்பு பலகை

    கோபி பகுதியில் பெரும்பாலான நகை கடைகள் அடைக்கப்பட்டு கிடந்ததால் அவசரத்துக்கு நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    ஈரோடு:

    ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பெரும்பாலான வியாபாரங்கள் நேற்றும் இன்றும் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஓட்டல், மளிகை கடை, நகை கடை என அனைத்து கடைகளிலும் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கோபியில் நேற்றும் இன்றும் பெரும்பாலான நகை கடைகள் திறக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் பலர் ரூ.500, 1000 நோட்டுக்களை கொண்டு வருவதால் அதை வாங்க மறுத்து கடைகளையே நகை வியாபாரிகள் அடைத்துவிட்டனர். இன்றும் பல கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன.

    மேலும் பூட்டப்பட்ட கடைகள் முன் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

    அதில், “ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மறு அறிவிப்பு வரும் வரை பெற்றுக் கொள்ள இயலாது சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று வாசகம் தீட்டப்பட்டு உள்ளது.

    கடைகள் அடைக்கப்பட்டு கிடந்ததால் அவசரத்துக்கு நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    Next Story
    ×