என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே பெண் மீது தாக்குதல்: பயத்தில் வாலிபர் தற்கொலை
    X

    ஆப்பக்கூடல் அருகே பெண் மீது தாக்குதல்: பயத்தில் வாலிபர் தற்கொலை

    ஆப்பக்கூடல் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர், பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). கட்டிட தொழிலாளி.

    கார்த்தி அதே பகுதியில் உள்ள ஏலச்சீட்டு நடத்தி வரும் கணவன், மனைவியான முத்துசாமி, பூங்கொடி யிடம் சீட்டு போட்டு இருந்தாராம். இதில் கார்த்தி ஏலச்சீட்டு எடுத்து பணம் வங்கி கொண்டு சரியாக பணம் கட்டாமல் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பூங்கொடி கார்த்தியிடம் பணம் கேட்டார் . இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்தி பூங்கொடியை சுத்தியால் தாக்கினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் ஒரு வித பயத்தில் இருந்த கார்த்தி கரட்டூர் மாதையன் கோவில் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்த வந்த போலீசார் அவரது உடலை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×