என் மலர்tooltip icon

    செய்திகள்

    பு.புளியம்பட்டி அருகே தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி பலி
    X

    பு.புளியம்பட்டி அருகே தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி பலி

    பு.புளியம்பட்டி அருகே தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் வனப்பகுதியையொட்டி உள்ள விளாமுண்டி வனத்தில் ஏராளமான மான்கள் மற்றும் வனவிலங்குகள் வசிக்கிறது.

    தற்போது அங்கு வன விலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் காட்டை விட்டு வெளியே வருகிறது.

    நேற்று இரவு விளாமுண்டி வனத்தில் இருந்து பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வெளியே வந்தது. பு.புளியம்பட்டி அருகே புங்கம்பாடியில் கோவை-சத்தியமங்கலம் ரோட்டுக்கு வந்து விட்டது.

    அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மான் மீது மோதியது. இதில் அந்த மான் தலை மற்றும் கழுத்து பகுதி நசுங்கிய நிலையில் பரிதாபமாக இறந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று மானின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×