search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
    X

    விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

    தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் வாங்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கவாத்து கத்தி, கிளை வெட்டும் கத்திரி, பிளாஸ்டிக் கிரேட்ஸ், பி.வி.சி. பைப், தார்பாய், தண்ணீர் டிரம், களைக்கொத்து, கடப்பாறை, மண்வெட்டி எடையிடும் கருவி மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. இந்த மானியம் ஆய்வுக்குப்பின் நேரிடையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×