என் மலர்

  செய்திகள்

  திருப்புவனம் அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
  X

  திருப்புவனம் அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்புவனம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

  திருப்புவனம்:

  திருப்புவனம் அருகே உள்ள பனையூர் காசி நகரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 40). இவர் தனது மனைவி கண்ணகியுடன் (38) மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

  நரிக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், அழகேசனை பின் தொடர்ந்து வந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்த போது மர்ம ஆசாமிகள், மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த கண்ணகி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

  இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

  Next Story
  ×