என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே காதல் திருமணம் செய்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    கோபி அருகே காதல் திருமணம் செய்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

    கோபி அருகே காதல் திருமணம் செய்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம் பாளையத்தை சேர்ந்தவர் கோமதி (வயது 21). பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    கோமதியும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வளையாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 4 மாதத்துக்கு முன் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகும் கோமதி பி.எஸ்.சி 3-ம் ஆண்டு தொடர்ந்து படித்து வந்தார்.

    இதற்கிடையே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தனர்.

    அதன்படி காதல் தம்பதியினர் கடந்த 20 நாட்களுக்கு முன் தங்களது பெற்றோர் மற்றும் உறுவினர்களுடன் திருப்பூர் அவினாசி மகளிர் காவல் நிலையம் சென்று நாங்கள் இருவரும் சட்டப்படி பிரிய உள்ளோம். விவாகரத்து செய்ய உள்ளோம் என்று கூறினர்.

    ஆனால் மகளிர் போலீசார் அவர்களிடம் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். எனினும் கோமதி கணவருடன் போகாமல் தனது தாய் ஊரான செட்டியாம்பாளையம் சென்றார்.

    நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது கோமதி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை தூக்கி கொண்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோபி சப்-கலெக்டர் கிருஷ்ணன் உன்னியும் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×