என் மலர்
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே கோஷ்டி மோதல்: 13 பேர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிதம்பர கோட்டகத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் மாதரசன் (22). விவசாயி. அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் அப்பு என்கிற விக்னேஷ். இவர்கள் இருவரும் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த மாதரசனின் உறவினர் நினைவஞ்சலி பிளக்ஸ் போர்டை விக்னேஷ் கழித்து விட்டதாக கூறப்படுறிது.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது கோஷ்டி மோதலாக உருவானது. இரு தரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மாதரசன் அளித்த புகாரின் பேரில் சுதாகரன், சசிக்குமார், கார்த்தி, அய்யப்பன், விக்னேஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுதாகரன் அளித்த புகாரின் பேரில் கவியரசன், மாதரசன், பாரத், குமார், ராஜா, வீரமணி, வளர்மதி, சவுந்தர வேணி ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பை சேர்ந்த 13 பேர் மீது ஆலிவலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் சுதாகரன், சசிகுமார், கவியரசன், மாதரசன், வளர்மதி, சவுந்திர வேணி ஆகியோர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.