என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து
    X

    கிணத்துக்கடவில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து

    கிணத்துக்கடவு அடுத்த பகவதி பாளையத்தில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
    கிணத்துக்கடவு:

    கோவையை சேர்ந்தவர் குருசங்கரன். இவருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை கிணத்துக்கடவு அடுத்த பகவதி பாளையத்தில் அமைந்துள்ளது.

    இன்று காலை வழக்கம் போல் தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காலை 11 மணிக்கு திடீரென தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென உயரே கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் வேலை பார்த்து கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

    தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்து கரும்புகை சுமார் 100 அடிக்கும் மேல் வெளியேறியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீ விபத்து பற்றி பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    மேலும் சம்பவ இடத்துக்கு கிணத்துக்கடவு தாசில்தார் பொன்னம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×