என் மலர்

  செய்திகள்

  போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி
  X

  போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  போச்சம்பள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுபுலியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது28), பெயிண்டர். இவரது மனைவி சிவசக்தி(25). இவர்களுக்கு திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆகிறது. இதில் 1½ வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.

  இந்த நிலையில், நேற்று மாதேஷ் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை- திருப்பத்தூர் செல்லும் சாலையில் சென்றார்.

  அப்போது, மணி தேங்காய் ஆயில் மில் அருகே உள்ள வளைவில் அவர் திரும்பியபோது எதிரே சாராக்காரணூர் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் முருகேசன் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென இந்த, 2 மோட்டார் சைக்கிள்களும் வளைவில் வைத்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

  கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த மோதலில் மாதேஷ் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் சரிந்து விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

  மேலும், முருகேசனுக்கு வலது கை உடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். அப்போது, அங்கு மாதேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் மாதேசுக்கு இன்னும் உயிர் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் கூறினர்.

  உடனே, 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாதேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது மனைவி சிவசக்தி கணவரின் உடலை கட்டி பிடித்து கதறி அழுதார்.

  தற்போது சிவசக்தி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், கணவர் இறந்து விட்ட அதிர்ச்சி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

  இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தனியார் தேங்காய் ஆயில் மில் அருகே உள்ள வளைவின் இரண்டு புறங்களின் ஓரத்திலும் உயரமான பனைமரங்கள் ஏராளமானவை உள்ளன.

  இந்த பனை மரங்கள் வளைவை மறைத்தவாறு வரிசையாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக கண்களுக்கு தெரிவதில்லை. இதனால் தான் இந்த விபத்து நேர்ந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முன் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

  Next Story
  ×