என் மலர்
செய்திகள்

நகராட்சிகளிலும் அரசு கேபிளில் இண்டர்நெட் வசதி விஸ்தரிப்பு: நவம்பர் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள உரிமத்தினை பயன்படுத்தி, ‘‘இல்லந்தோறும் இணையம்’’ என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை முதல் கட்டமாக 01.03.2016 முதல் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது.
குறைந்த கட்டணம் மற்றும் சிறப்பான சேவையின் காரணமாக இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டாம் கட்டமாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ‘‘இல்லந்தோறும் இணையம்’’ திட்டத்தினை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தவுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தினை இந்நிறுவனத்தின் இணைய தளத்தில் (ஷ்ஷ்ஷ்.tணீநீtஸ்.வீஸீ) கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15-ந்தேதி மாலை 3.00 மணி வரை ஆகும்.
விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன், அவை கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக தேசிய வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு உதவி செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story