என் மலர்
செய்திகள்

மது குடித்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
அயனாவரம் அருகே மது குடித்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லிவாக்கம்:
அயனாவரம் கே.கே.நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 17). அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தீபாவளியையொட்டி சதீஷ் நண்பர்களுடன் மது அருந்தினார். இதனை அறிந்த ராஜா மகனை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சதீஷ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு, சீனிவாச மூர்த்தி அவன்யூவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் கஜேந்திரன் (60). இவர் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story