என் மலர்

    செய்திகள்

    தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
    X

    தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி அருகே இரு வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (வயது40). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்களில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டு முன்புறம் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை கவனிக்காமல் அதில் விழுந்து மின் கம்பத்தின் மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகில் உள்ள க.புதுப்பட்டி சொசைட்டி தெருவை சேர்ந்தவர் சுருளியப்பன் (56). இவர் சம்பவத்தன்று ரமேஷ் என்பவரது மாடியில் சிண்டெக்ஸ் டேங்க் நிறைந்து விட்டதா என்பதை பார்க்க மேலே சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக படியில் தவறி கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×