என் மலர்
செய்திகள்

குன்னத்தூர் அருகே 4 மயில்கள் மர்ம சாவு
குன்னத்தூர் அருகே செங்காளிபாளையம் பகவதி அம்மன் கோவில் அருகே நான்கு மயில்கள் இறந்து கிடந்தது.
குன்னத்தூர்:
குன்னத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது மழை இல்லாத காரணத்தினால் மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து மக்காசோளம், நிலக் கடலை, தக்காளி, மிளகாய் ஆகிய பயிர் களை நாசப்படுத்தி வருகிறது.
விதைத்த சோளங்களையும் விடுவதில்லை. 20, 30 மயில் கூட்டமாக வந்து தின்று விடுகிறது. சம்பவத்தன்று காலை குன்னத்தூர் அருகே செங்காளிபாளையம் பகவதி அம்மன் கோவில் அருகே நான்கு மயில்கள் இறந்து கிடந்தது. அருகில் உள்ள விவசாய நிலத்தில் சோளம் விதைத்துள்ளதால் மயில்கள் வராமல் இருக்க விஷம் வைத்து கொன்று அந்த மயில்களை மர்ம நபர்கள் போட்டு சென்றுள்ளனர்.
ஆகவே இப்பகுதியில் மயில்களுக்கு தனி சரணாலயம் அமைக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story






