என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே பட்டாசு விழுந்து தென்னைமரம் எரிந்தது
சீர்காழி பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ராக்கெட் வெடி விழுந்து தீப்பிடித்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ராக்கெட் வெடி விழுந்து தீப்பிடித்தது.
இதுபற்றி சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
Next Story






