என் மலர்
செய்திகள்

வணிகவளாக கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் - என்ஜினீயர் கைது
விருத்தாசலத்தில் வணிகவளாக கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.23 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.நகரை சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 27). இவர் பஸ் நிலையம் அருகே உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகிறார்.
இந்த வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க விருத்தாசலம் அருகே கண்டியாங்குப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
பின்னர் சையத் உசேன், மின்வாரிய அலுவலக உதவி மின் பொறியாளர் இளங்கோவனை சந்தித்தார். அப்போது மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் ஒரு கடைக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று இளங்கோவன் கூறியதாக தெரிகிறது.
இதைக்கேட்ட சையத் உசேன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறினார். ஆனால் ரூ.23 ஆயிரம் தந்தால்தால் மின் இணைப்பு தர முடியும் என்று இளங்கோவன் கண்டிப்பாக கூறிவிட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சையத்உசேன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின்பேரில், ரசாயன பவுடர் தடவிய பணத்தை மின்வாரிய என்ஜினீயர் இளங்கோவனிடம் சையத்உசேன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story