என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் புகுந்து பொருட்கள் திருட்டு: வாலிபர் கைது
    X

    வீட்டில் புகுந்து பொருட்கள் திருட்டு: வாலிபர் கைது

    வேதாரண்யம் அருகே வீட்டில் புகுந்து பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் மருதூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வாசுகி (56). இவர் நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

    திரும்பி வீட்டிற்கு வந்தபோது வீட்டிற்குள் இருந்து ஒரு வாலிபர் வெளியே ஓடினார். இதையடுத்து அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் துரத்திசென்று அந்த வாலிபரை பிடித்தனர். அவனிடம் வாசுகியின் வீட்டு பீரோவிலிருந்து திருடப்பட்ட வெள்ளிபொருட்கள், கடிகாரம், மெமரிகார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாலிபரை கரியாப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு முருகையன் மகன் வேலு (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்தினர்.

    Next Story
    ×