என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலாற்றில் மணல் கடத்திய 7 பேர் கைது
    X

    பாலாற்றில் மணல் கடத்திய 7 பேர் கைது

    பாலாற்றில் மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஒரிக்கை பாலாற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஒரிக்கை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், குமார் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வாயலூர் பாலாற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாகர், முனுசாமி, சுரேஷ், ராதாகிருஷ்ணன், இளங்கோ ஆகியோரை கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×