என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்
    X

    ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்

    ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் சிவா வீதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் அனிதா (வயது 17).

    இவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பத்தன்று கல்லூரிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு அனிதா சென்றார். பிறகு மாலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அனிதாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.

    எனவே இது பற்றி வீரப்பன் சத்திரம் போலீசில் பிரபாகாரன் புகார் கூறி உள்ளார். அதில் காணாமல் போன எனது மகள் அனிதாவை கண்டுபிடித்து கொடுக்கும்படி கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×