என் மலர்
செய்திகள்

தமிழகம்-புதுவையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது: நாராயணசாமி பேட்டி
தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும், மேலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடுதான் செயல்படுகிறோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
ஆலந்தூர்:
டெல்லியில் இருந்து புதுவை வந்த முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடக, புதுவை ஆகிய மாநிலங்களின் வாதத்தை கேட்டு உள்ளது. கர்நாடக சார்பாக தங்களிடம் தண்ணீர் இல்லை என்று செய்த மனுவையும் பரிசீலிப்பதாக கூறி உள்ளது.
மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை பரிசீலினை செய்த பிறகு தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
கர்நாடகா மாநிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. அது வருத்தமளிக்கிறது. காவிரி பிரச்சினை பற்றி பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். பதில் இன்னும் வரவில்லை.
நான் ஜனாதிபதியை சந்தித்து காவிரி பிரச்சினையில் தலையிட்டு தமிழகம், புதுவைக்கு இடைகாலத்தில் வழங்க வேண்டிய தண்ணீரையும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை வைத்து உள்ளேன். இது சம்பந்தமாக அரசிடம் பேசுவதாக அவர் கூறி உள்ளார்.
காவிரி பிரச்சினையில் புதுவை மாநிலத்தின் கருத்தை ராகுல் காந்தியிடம் கூறி உள்ளேன்.
புதுவையில் வீட்டுக்கு கழிப்பறை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கிராமம் மற்றும் நகரம் முழுவதுமாக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதிக்குள் கட்டிமுடிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்தோடுதான் செயல்படுகிறோம்.
புதுச்சேரியில் நெல்லிதோப்பு இடைத்தேர்தலின் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவிப்பார். தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்து அழைத்து உள்ளேன். வருவார் என்று நம்புகிறேன். மனு தாக்கல் செய்வதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் சந்திக்க உள்ளேன்.

Next Story