என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே வீடு புகுந்து வேன் டிரைவர்- மனைவி மீது தாக்குதல்
    X

    சென்னிமலை அருகே வீடு புகுந்து வேன் டிரைவர்- மனைவி மீது தாக்குதல்

    சென்னிமலை அருகே வீடு புகுந்து வேன் டிரைவர் மற்றும் மனைவி மீது தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    சென்னிமலை அடுத்த ஈங்கூர் அருகே உள்ள கவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). வாடகை வேன் ஒட்டி வந்தார். இவர் கவுண்டனூரில் இருந்து ஈங்கூருக்கு வேனில் சென்று கொண்டு இருந்தார்.

    வேனை அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவரான குப்புசாமி என்பவர் ஒட்டினார். சென்னிமலை பெருந்துறை ரோட்டினை கடக்க முயன்ற போது இந்த வேனும் எதிரில் வந்த ஆம்னி காரும் எதிர்பாரத விதமான நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரின் பக்க வாட்டு கண்ணாடி உடைந்து விட்டது.

    இதனால் கார் டிரைவருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் ரவிச்சந்திரன் வீட்டுக்குள் புகுந்து ரவிசந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ரா (32) ஆகியோரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×