என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயம்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த கைலவனம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ரவி (41). இவர் கடந்த 16-ந்தேதி இரவு வேதாரண்யம் வந்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர் பூப்பெட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கீழையூர் காவல் சரகம், பூவத்தடி ஞானசேகரன் மகன் வினோத் (28) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் ரவி பலத்த காயமடைந்தார்.
இவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story






