என் மலர்

  செய்திகள்

  மயிலாப்பூரில் தனியார் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு
  X

  மயிலாப்பூரில் தனியார் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மயிலாப்பூரில் தனியார் ஊழியரை தாக்கி செல்போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  திருவான்மியூர்:

  மயிலாப்பூரை சேர்ந்தவர் சோலை முத்து (37). இவர் பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து விட்டு கம்பெனி கார் மூலம் வீடு திரும்பினார். மயிலாப்பூரில் சோலை முத்துவை இறக்கிவிட்டு கார் சென்று விட்டது.

  அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்து சோலை முத்து விடம் ஆட்டோ வேணுமா? என கேட்டனர். பின்னர் சோலை முத்துவை தாக்கி அவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பி சென்றனர். செல்போனின் மதிப்பு ரூ.40 ஆயிரம்.

  இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×