என் மலர்

  செய்திகள்

  பேரூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தாய் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை
  X

  பேரூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தாய் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தாய் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  கோவை:

  கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் காந்தி காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாராள் (வயது 55). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 1 மகன், 1 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

  மாராள் தனது கடைசி மகனான பாலசுப்பிரமணியம் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி பலஇடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால் எந்த பெண்ணும் பாலசுப்பிரமணியத்துக்கு அமையவில்லை.

  இதனால் மாராள் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

  பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாராளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாராள் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×