என் மலர்

  செய்திகள்

  சென்னையில் இருந்து கோவை வந்த சேரன் எக்ஸ்பிரசில் நியூசிலாந்து ஆசிரியையிடம் 20 பவுன் நகை- பணம் கொள்ளை
  X

  சென்னையில் இருந்து கோவை வந்த சேரன் எக்ஸ்பிரசில் நியூசிலாந்து ஆசிரியையிடம் 20 பவுன் நகை- பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இருந்து கோவை வந்த சேரன் எக்ஸ்பிரசில் நியூசிலாந்து ஆசிரியையிடம் 20 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை :

  கோவை போத்தனூர் அருகே உள்ள சிட்கோ அண்ணை இந்திரா காலனியை சேர்ந்தவர் சந்தியா ஸ்டாலின் (வயது 56). இவர் தற்போது நியூசிலாந்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

  சந்தியா ஸ்டாலின் நேற்று நியூசிலாந்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தார். பின்னர் கோவையில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வர சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரசில் குளிர்சாதன வசதி கொண்ட ஏ1 பெட்டியில் ஏறினார்.

  அவர் பயண களைப்பில் அயர்ந்து தூங்கினார். ரெயில் இன்று அதிகாலை ஈரோடு தாண்டி வந்த போது அவர் வைத்து இருந்த கைப்பை மாயமானது தெரியவந்தது.

  கைப்பையில் ரூ. 15 ஆயிரம் பணம், ஆயிரம் நியூசிலாந்து டாலர் , தாலி செயின் , வைரம் பதித்த நெக்லஸ், கைச்செயின் மற்றும் மோதிரம் உள்பட 20 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை இருந்தது.

  இதில் அதிர்ச்சியடைந்த சந்தியா ஸ்டாலின் ரெயில் இன்று அதிகாலை கோவை வந்ததும் இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

  சந்தியா ஸ்டாலின் அயர்ந்து தூங்கிய போது அங்கு வந்த மர்மநபர் யாரோ அவரின் கைப்பையை திருடிச் சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×